எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை இல்லை: சென்னை ஐகோர்ட்

சற்றுமுன் தமிழகம்

s.v.sekhar1 - 2026பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது.

எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் அவர் மீது பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், எஸ்.வி. சேகரை கைது செய்யவும் தடை விதிக்க முடியாது என்றும் கூறி கோடைகால நீதிமன்றத்துக்கு எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் கோரும் மனுவை மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எஸ்.வி.சேகர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.