
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ஏற்கனவே ரஜினிகாந்த் அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது
அந்த வகையில் மூக்குத்தி அம்மன் உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்வரை நேரில் சந்தித்தார்
அப்போது அவர் தனது சார்பாக ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கான காசோலையை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.