கொரோனாவால் உயிரிழந்ததாக பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த நடிகையின் தாய்!

Published:

deepa venkat
deepa venkat

நடிகை தீபா வெங்கட் கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் பரவிய நிலையில் அவரது தாயார் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

டப்பிங் ஆர்டிஸ்ட், சீரியல், திரைப்பட நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகத் திறமை கொண்டவர் தான் தீபா வெங்கட்.. 80 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், தில், உள்ளம் கொள்ளை போகுதே போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் அவர் நடித்துள்ளார்.

மேலும் முன்னணி நடிகைகள் சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

deepa
deepa

இந்நிலையில் தீபா வெங்கட் கொரோனாவால் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் இது உண்மையில்லை இல்லை என்று அவரது தாயார் விளக்கமளித்துள்ளார்.

தனது மகள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தீபா வெங்கட் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், யாரும் இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img