சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் ஆக்சிஜன் சிலிண்டருடன் கொரோனா நோயாளிகளைத் தரையில் படுக்க வைத்தும், அமரவைத்தும் சிகிச்சை அளிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தொற்றுக்கு என்று அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் நிரம்பி நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
இதில் பல இடங்களில் ஒரே படுக்கையில் இரண்டு மற்றும் மூன்று நோயாளிகளை படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருந்த போதிலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பியதால் புதிதாக வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டருடன் தரையில் அமரவைத்தும், படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனது.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு படுக்கை வசதியில்லாத நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.