குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

இந்தியா சற்றுமுன்

08 July06 jharkhand nuns ani - 2026ஜார்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்றதாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அன்ன தெரசாவின் ‘மிஷனரி ஆஃப் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், ஒன்றில் பெண்களும் விதவைகளும் தங்கியுள்ளனர். மற்றொன்றில், குழந்தைகளும் சிறுவர், சிறுமியர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு பணியாற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் சட்டத்துக்குப் புறம்பாக, குழந்தைகளை விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், கன்னியாஸ்திரிகள் இருவர் பலமுறை, பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு குழந்தைகளை சட்டத்துக்குப் புறம்பாக விற்றதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.