அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

02 July24 fisherman - 2026

தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாண சிறையில் அடைத்தனர்.

இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி மீனவர்களை விடுதலை செய்து உத்திரவிட்டார். மேலும் மீனவர்கள் ஏழு பேர் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த குற்றத்திற்க்காக தலா மீனவர் ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 14,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அபராதத் தொகை இந்திய துணை தூதரக அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு மீனவர்களை விடுவித்து அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.