ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை வல்லுநர் குழு ஆய்வு

தமிழகம்

03 Sep21 Sterlite copper - 2026

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் குழு இன்று மாலை தூத்துக்குடி வருவதாக அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை கொட்டும் இடத்தை வல்லுநர் குழு இன்று மாலை பார்வையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க உள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

பசுமைத் தீர்ப்பாய குழுவின் கருத்துக்கேட்புக் கூட்டம் பற்றி ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஸ்டெர்லைட் வழக்குகளில் தொடர்புடையவர்களும், சம்மந்தப்பட்ட தரப்புகளும் பங்கேற்கும் வகையில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.