லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஹோல்சம் ரைஸ்!

Holmes Rice - 2026

ஹோல்சம் ரைஸ்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
உடைத்த கோதுமை – அரை கப்
பாசிபருப்பு – கால் கப்
கீரை – ஒரு கப்
பேபி பொட்டேட்டோ – 6
வெங்காயம் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 8 பல்
கொத்தமல்லி – அரை கட்டு
பச்சை மிளகாய்- 4
பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, மிளகு, கலோஞ்சி, எண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவையான அளவு

செய்முறை
அரிசியையும் கோதுமையும் கழுவி ஒன்றாக ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, மல்லி, மிளகாயை ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கவும். உருளையை தோல் நீக்கி முள்கரண்டியால் குத்தி உப்பு தூவி வைக்கவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கூறியவற்றை தாளிக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரையில் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும். எப்பொழுதுமே இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேராக எண்ணெயில் சேர்க்கவும். பிறகு தீயை மிதமாக வைத்து கொண்டு கிளற வேண்டும். பச்சை வாசம் போன பின்பு தான் மற்றதை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பதார்த்தத்தின் சுவையே மாறுபடும்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

பின்பு உருளை மற்றும் கீரையை சேர்த்து வதக்கவும். இரண்டொரு நிமிடத்தில் ஊற வைத்த அரிசி மற்றும் கோதுமையை சேர்த்து வதக்கவும்.

அரிசியில் உள்ள தண்ணீர் முற்றிலும் வற்றிய பின் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பாசிப்பருப்பை தண்ணீரிலிருந்து எடுத்து வடிக்கட்டி சேர்க்கவும். உப்பு சேர்த்து விட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் சூடாக ரைத்தாவுடன் பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. சுட்ட அப்பளம் இருந்தால் போதும். இது கார்பஸ், ப்ரோட்டீன், ஃபைபர், வைட்டமின் சி என்று எல்லா சத்துக்களும் நிறைந்த ஒரு ரைஸ்.

குறிப்பு
எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். வெந்தைய கீரை கூட நன்றாகவே இருக்கும். சிறு உருளை இல்லையென்றால் பெரிய உருளையை துண்டுகளாக்கி சேர்க்கவும். உருளையை கழுவி அரிந்து வைக்கும் போது உப்பு தூவி வைப்பதால் கருக்காமல் இருக்கும்.

இதில் உங்களுக்கு விருப்பமான வேற அதிகம் குழையாத காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை சேர்க்க பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விடலாம். பாசிப்பருப்பு வேண்டாம் என்றால் அதற்கு பதிலாக ஊற வைத்த சோயா சேர்த்தும் செய்யலாம்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories