தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னராக இருப்பாரோ விஷால்!? சந்தேகம் கிளப்பும் அழகப்பன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
vishal controversy - 2026

‘தமிழ் சினிமாவை புற்றுநோய் போல அரித்துக் கொல்லும் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

பதவிக்கு வந்ததும் முதல் வேலை… தமிழ் ராக்கர்ஸை நசுக்குவதுதான் என்று சொல்லித்தான் விஷால் பதவிக்கு வந்தார். ஆனால் அது தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் தொடர்பாக தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் விஷால். சொல்லப் போனால் விஷால் பதவிக்கு வந்த பிறகுதான்  தமிழ் ராக்கர்ஸின் கொட்டம் மேலும் அதிகரித்திருக்கிறது.

முன்பெல்லாம் படங்களை மட்டும் திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்தார்கள். இப்போதோ… படங்களின் ஆடியோக்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிடுவதற்கு முன்பே வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.

எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷாலோ என்று சந்தேகமாக இருக்கிறது என்றார் அழகப்பன்…!

சேச்சே… அப்படி எல்லாம் இருக்காது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.