அதிவேக 10 ஆயிரம் ரன் சாதனை: சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

07 Oct22 dhin Virat Kohli - 2026

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்து, பட்டியலில் அவரை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் மூன்றாவது வீரராகக் களம் இறங்கி விளையாடிய விராட் கோலி 81 ரன்னைத் தொட்டபோது 205 இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். முன்னதாக, சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.

தற்போது விராட் கோலி 205 இன்னிங்சில் அடித்ததன் மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.