சுப்ரபாதம் பாட்டு ஒலிக்க விட்டதற்காக அர்ச்சகரை கொலை செய்த மதவெறி இமாம்

உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

IMG 20181103 WA0002 - 2026

தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல்லில் அக்டோபர் 26ம் தேதி அன்று காலை 5.30 மணிக்கு பொச்சம் மா மைதானம் என்ற இடத்தில உள்ள சத்ய சாய் பாபா கோவிலில் ‘சுப்ரபாதம்’ இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எல். பி.நகர் மசூதியின் இமாம், சையது நதிக் உசைனி என்பவர் அந்த கோவிலிற்குள் சென்று சுப்ரபாதத்தை ஒலிபரப்ப கூடாது என்று கூறினார். ஆனால் அந்த கோவிலின் பூசாரி சத்யா நாராயணா அவர்கள் அதை ஏற்க மறுத்த காரணத்தினால் அவரை அடித்து உதைத்து தாக்கினார். அங்கே இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.

தாத்ரி போன்ற நிகழ்வுகளுக் கெல்லாம் குரல் கொடுத்த முற்போக்குகளும், காங்கிரஸ் கட்சிகளும் இந்த மதவெறியை கண்டித்து அமைதி காப்பது ஏன்? ஐயோ, சிறுபான்மை சமுதாயத்தினர் தாக்கப்படுகின்றனர், சகிப்பு தன்மை இல்லையே என்றெல்லாம் குரல் கொடுக்கும் ஊடகங்கள், ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படும் போது அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது ஏன்? கொலைகளை வேடிக்கை பார்ப்பது தான் மதசார்பற்ற தன்மையா? உத்திர பிரதேசத்திலும், தில்லியிலும் நடை பெறும் சம்பவங்களை மாதக்கணக்கில் விவாதம் செய்யும் ஊடகங்கள், மத வெறியினால் நடைபெற்ற இந்த படுகொலை குறித்து வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

பயமா? பாசமா?

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.