தமிழகத்தில் எங்குமே பேனர் வைக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் தடை!

சற்றுமுன்
12 July31 high court - 2026

சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர் வைக்க அரசியல் கட்சிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது  பிறப்பித்துள்ளது .

விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்  என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது .

முன்னதாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதியை மீறி பேனர் அல்லது விளம்பர பதாகைகள் வைத்தால் அதிகபட்சமாக ஒருவருடம் சிறை தண்டனை  விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நேற்று பதவியை ராஜினாமா செய்யுங்கள்  என்று உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது மேலும் விதி மீறல் பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியிருந்தது.

அரசியல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணைய வேண்டியதுதானே?என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது .

விதி மீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.