ஏன் சினிமாவில் நடிக்கிறேன் தெரியுமா..? ரங்கராஜ் பாண்டே சொன்ன விளக்கம்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
rangarajpandey - 2026

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடிக்கிறேன் என்பது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக நிர்வாக ஆசிரியராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த தொலைக்காட்சியிலிருந்து அண்மையில் விலகிய அவர், பின்னர் சினிமாத்துறையில் கால் பதிக்கப்போவதாகக் கூறி, ஒரு படத்தில் நடிப்பதற்கான செய்தியை பகிர்ந்திருந்தார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் அடுத்து அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பாண்டே நடித்து வருகிறார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாண்டே “வினோத் என் நண்பர். அவர் கேட்டுக்கொண்டதால் இதில் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி, மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.