பிப்.12ல் தமிழகம் வருகிறார் யோகி ஆதித்யநாத்! தமிழிசை தகவல்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
tamilisai soundarrajan 1 - 2026

நல்ல கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என்று கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வரும் பிப்.12ல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வருகிறார் என்று கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை. அப்போது அவர், தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி மட்டுமன்றி பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்கள் பலரும் தமிழகம் வர இருக்கின்றனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்
​
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நல்ல கூட்டணியை அமைப்போம். தமிழகத்தில் மிக பிரம்மாண்டமான கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

காவல் அதிகாரியை விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்து வைத்தது தவறான முன்னுதாரணம்.

சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று கனவு காண்கிறார்கள்.

மம்தாவிற்கு தமிழகத்தில் சிலர் ஆதரவு தெரிவிப்பது வேடிக்கை.

மதிமுக.,வின் கறுப்புக் கொடி போராட்டம் , யானையை சுண்டெலி தடுக்க நினைப்பது போன்றது என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.