கேரளத்தில் பாஜக.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தியா சற்றுமுன்
modi kerala - 2026

சபரிமலை விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்தபோது, ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான மனப்போக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக., முனைந்தது.

தெற்கு கேரளத்தில் பாஜக.,வுக்கு ஓரளவு செல்வாக்கு உண்டு எனினும், மலபார் பகுதி, வடக்கு கேரளத்தில் பெரிய ஆதரவு இருந்ததில்லை. குறிப்பாக, கம்யூனிஸ்ட்களின் கோட்டையான கண்ணூர் பகுதியை ஒட்டி அடிக்கடி பாஜக., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்வது கம்யூனிஸ்ட்களின் வேலையாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் சபரிமலை விவகாரத்துக்குப் பின்னர், தென் கேரளத்தில் பாஜக.,வுக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கூறப் படுகிறது. எனவே தென் கேரளத்தில் எப்படியும் 3 தொகுதிகளாவது கைப்பற்ற முடியும் என்று பாஜக., நம்புகிறது.

குறிப்பாக, திருவனந்தபுரம், பத்தனம்திட்ட, ஆற்றிங்கல் ஆகிய தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. வடகேரளத்தில் உள்ள காசர்கோடு, பாலக்காடு தொகுதிகளில் பெரும் போராட்டங்களையும் இழுபறிகளையும் சந்தித்து வருகிறது பாஜக., இருப்பினும், பாஜக.,வுக்கு 5 தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப் படுகிறது. 1.திருவனந்தபுரம்
2.ஆற்றிங்கல்
3.பத்தனம்திட்ட
4.மாவேலிக்கரா
5.திருச்சூர்
6.காசர்கோடு
7.பாலக்காடு ஆகிய தொகுதிகளில் பாஜக., அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.