பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப் படும் திருவண்ணாமலை தலத்தில், கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் 10 ம் நாளான இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப் பட்டது.
இன்று அதிகாலை நான்கு மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் மூர்த்தி குருக்கள் கையில் ஏந்தி உள்ள பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் வெளிபிராஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
பின்னர் இன்று மாலை 6 மணி அளவில், திருவண்ணாமலையில் மலை மீது உள்ள எண்ணெய்க் கொப்பரையில் திரியிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது திருவண்ணாமலையில் கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோஹரா என்று பக்தி கோஷம் முழங்க தீப தரிசனம் செய்தனர்.




