காதலர் தின சோகம்! தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு ஓடிய காதலன்! தூக்கில் தொங்கிய இளம் நடிகை!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

yashika - 2026

தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு, காதலன் தப்பித்து ஓடியதால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது தாய்க்கு அனுப்பிய மெசேஜால் விவரம் தெரியவந்ததும், காதலர் தினத்தில் இத்தகைய ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்களே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தூற்றி வாரி காறித் துப்பி வருகிறார்கள்.

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த துணை நடிகை யாசிகாதான் இத்தகைய விபரீதமான முடிவை எடுத்துள்ளார். சென்னையில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்நவர் யாசிகா(21). விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் கூட இவர் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவுக்கும்(22) யாசிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோகன் பாபு அவரைப் பிரிந்து, திடீரென தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த யாஷிகா கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், “நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை கொடுமைப் படுத்திய மோகன்பாபுவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என அவரின் தாயாருக்கு வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.