ரூ.100 போதும்.. ஒரு நாள் முழுக்க ‘டெய்லி பாஸில்’ மெட்ரோ ரயிலில் ஊர் சுத்தலாம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

chennai metro 2 - 2026

சென்னை: சென்னை மெட்ரோவில் இப்போது நாள் பாஸ் என ரூ.100க்கு ஒரு நாள் முழுதும் செல்லுபடியாகும் டிக்கெட் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் உள்ளது போல், டெய்லி பாஸ் முறையை மெட்ரோ ரயிலிலும் அறிமுகப் படுத்த முடிவு செய்யப் பட்டது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் 150 ரூபாய் செலுத்தி இந்த டெய்லி பாஸை பெற்றுக் கொள்ளலாம். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயிலிலும் பயணிக்கலாம். பயணம் முடிந்ததும், அந்த டெய்லி பாஸை ரயில் நிலைய கவுன்டரில் கொடுத்து, 50 ரூபாயை திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம், நூறு ரூபாயில் சென்னை மெட்ரோவில் நாள் முழுக்க சுற்றிவரலாம். சென்னையைச் சுற்றிப்பார்க்க வரும் வெளியூர்க்காரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

மேலும் இதில் ஒரு சலுகை, டெய்லி பாஸ் வாங்கிய நபரே அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை! காலையில் ஒருவர் வாங்கிவிட்டு, மாலையில் வேறு ஒருவர் அதை திருப்பிக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த பாஸ் மூலம் குடும்பத்தினர், நண்பர்களும் பயணிக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.