தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாது!: அன்புமணி விளக்கம்

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

anbumani ramadoss 1 - 2026

தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது என்று கூறினார் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக., கூட்டணியில் ஏன் பாமக., சேர்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார் பாமக., இளைனஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். முந்தைய நாள் வரை அதிமுக., வை கடுமையாக விமர்சித்து வந்த பாமக., ஏன் திடீரென்று கூட்டணி வைத்தது என்பதற்காக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்திவருகிறார்.

அப்போது அவர் கூறியவை…

தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது. அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம் !

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை ! ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை; இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை!

10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்!

விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.