உலகிலேயே அதிக விலை கொடுத்து.. ஒரு டீ குடித்தவராம்!

அடடே... அப்படியா? இந்தியா புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

abhi2 tea - 2026ஒரு டீயோட விலை அதுவும்… உலகின் உச்ச பட்ச விலை! அதான் நம் விமானி அபிநந்தன் குடித்த டீயின் விலையாம்!

இதைச் சொல்லி கேலி செய்பவர்கள் பாகிஸ்தானியர்கள்! கூடவே பாகிஸ்தானுக்காக வக்காலத்து வாக்கும் இந்திய துரோகிகள்! அவர்கள் சமூக வலைத்தளங்களில்  கிண்டலும் கேலியுமாய் ஒரு சாயாவுக்கு விலை Mig-21 ரக விமானம் என்கின்றனர்!

நமது விமானி அபிநந்தன் பாகிஸ்தானால்  சிறை பிடிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ
முகாமில் வைக்கப் பட்டார். அவருக்கு டீ  கொடுத்துக் கொண்டே, தேநீர் எப்படி என்று  கேட்கிறார் பாகிஸ்தான் அதிகாரி. அதற்கு அபிநந்தன், மிகச் சிறந்த சுவையுடன்  நன்றாக இருக்கிறது… என்கிறார்.

abhinandan1 1 - 2026

இதனை பாகிஸ்தானில், ஒரு சாயாவின்  விலை Mig-21 ரக விமானம் என பாகிஸ்தான் ராணுவ கேண்டீன் பில்லில்  எழுதி, ராணுவத்தை அவமானப்படுத்தி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கேலி செய்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள்..!

abi 1tea - 2026

உலகத்துக்கே நாகரிகம் கற்றுக்  கொடுத்தவர்கள் நாம்.. ஆனால் இது போன்ற கீழ்த் தரமான செயல்களை செய்யும் பாகிஸ்தானுக்கு அவர்கள் வழியில் தான் நாம் பதில் சொல்ல வேண்டும்… என்று இந்திய தேசப் பற்றாளர்கல் பொருமுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஆனால், பதிலுக்கு எஃப் 16 என்ற மாபெரும் விலையைக் கொடுத்திருக்கின்றனர் பாகிஸ்தானியர் என்பதும், தங்கள் நாட்டின் கௌரவத்தையே அதற்கு விலையாகக் கொடுத்திருக்கின்றனர் பாகிஸ்தானியர் என்பதையும் மீம்ஸ்களாகப் போட, பாகிஸ்தான் ஆதரவு இந்திய துரோகிகளுக்கு கை வரவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.