Homeஉரத்த சிந்தனைபாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியா வைத்த ‘செக்’! சிரிக்கும் சீனா!

பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு இந்தியா வைத்த ‘செக்’! சிரிக்கும் சீனா!

pakistan terror funding - Dhinasari Tamil

இதென்ன? சுடப் பட்ட பாகிஸ்தான் விமானத்தைக் காட்டச் சொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள்? பேரீட்சை பழம் வாங்கவா? என சொல்லி அவர்களாகவே சிரித்து கொண்டது பகுத்தறிவு + இம்ரான் கான் கோஷ்டி..!

இந்திய தளபதி ஒருவர் சும்மா தகரம் தூக்கி கொண்டு வருவாரா? விஷயம் இல்லாமலா இருக்கும்…விஷயம் பெரிதாக இருகின்றது..!

ஆம் அந்த தகரம் விமானத்தில் இருந்து விமானத்தை அழிக்க ஏவும் “Advanced Medium-Range Air-to-Air Missile” சுருக்கமாக “AMRAAM” என்பார்கள்… விமானத்தில் இருந்து எதிரி நாட்டு விமானத்தை அந்தரத்தில் அழிக்க இதை பயன்படுத்துவார்கள், பாகிஸ்தானின் எப்16 விமானத்தில் இது இருந்தது…

இந்தியவிமானம் அதை அழிக்கும்பொழுது அந்த ஏவுகனை இருந்து வெடித்து அதன் கழிவான இந்த தகடு இந்தியா கையில் சிக்கியது.. பொதுவாக சர்வதேச விதிப்படி எந்தநாடு தயாரித்தாலும் அதில் சில எண்கள் பதியபட வேண்டும்..!

அப்படி அமெரிக்காவின் தயாரிப்பாக இந்த ஏவுகனை தயாரிக்கபட்டு இந்த நம்பரும் பொறிக்கபட்டிருந்தது.. ! பாகிஸ்தான் என்னவகை ஆயுதம் வாங்குகின்றது என்ற மிக துல்லிய தகவலை வைத்திருந்த இந்தியா, அது அமெரிக்க தயாரிப்பு எனினும் பாகிஸ்தானுக்கு அது கொடுத்த பட்டியலில் இல்லை என்பதை உணர்ந்து மிக தந்திரமாக காட்சியினை வெளியில் கொண்டுவந்தது..!

03 Sep17 Pakistan - Dhinasari Tamil

அமெரிக்க பத்திரிகைகள் விஷயத்தை பெரிதாக்கின , விஷயம் அமெரிக்க அரசுக்கு சிக்கலாயிற்று… அதாவது இந்த ஏவுகனையினை அமெரிக்கா விற்றது நிஜம் ஆனால் தைவானுக்கு என அவர்கள் பட்டியலில் இருக்கின்றது, அமெரிக்க செனட்டிலு அந்த ஒப்புதலே இருக்கின்றது…!

அதாவது 2008 மற்றும் 2010ல் இந்த ஏவுகனை தைவானுக்கு விற்கபட்டதாக ஒப்புதல் பெறபட்டுள்ளது… அமெரிக்க சட்டபடி அபாய ஆயுதங்களை இன்னொருநாட்டுக்கு விற்கும்பொழுது செனட்டின் அனுமதி வேண்டும்..!

விஷயம் வெளிவந்ததும் தைவான் அவசரமாக மறுக்கின்றது, தங்களுக்கு அப்படிபட்ட ஏவுகனை ஏதும் விற்கபடவில்லை எனவும், அதை பொறுத்தும் அளவு விமானம் தங்களிடம் இல்லை எனவும் சொல்லிவிட்டது தைவான்..!

தைவான் இப்படி சொன்னதும் சீனா புன்னகைப்பது வேறு விஷயம், தைவானின் ராணுவ ரகசியம் வெளியாயிற்று!

ஆக… தைவானுக்கு விற்பதாக சொல்லி அமெரிக்க அரசோ ராணுவமோ திருட்டுத் தனம் செய்து செனட்டில் ஒப்புதல் வாங்கியதா என சலசலக்கின்றது அமெரிக்கா…! ஏற்கெனவே எப்16 விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தியதை அமெரிக்கா கண்டித்து கொண்டிருக்கின்றது , அங்கு அதுவும் சிக்கல்..!

13 July02 Pakistan austrila - Dhinasari Tamil

இப்பொழுது அமெரிக்க தயாரிப்பான “AMRAAM” வகை ஏவுகனைகள் தைவானுக்கு கொடுக்கபட்டதாக எப்படி பாகிஸ்தானுக்கு போனது என அடுத்த சிக்கல்…!

விரைவில் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்தில் ஆடிட் செய்யும் வேலை நடக்குமோ என்னவோ..?! பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா காட்டும் இரட்டை வேடத்தை போட்டு உடைத்திருக்கின்றது இந்தியா..!

ஒருபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிப்பதும், இன்னொரு பக்கம் ரகசியமாக அமெரிக்க செனட்டை ஏமாற்றி ஆயுதம் கொடுப்பதுமாக அது ஆடியிருப்பதை கண்டு பலர் முகம் சுளிக்கின்றனர்…!

பல சர்வதேச சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, அதில் பாகிஸ்தானை பல வகையில் சிக்கவைத்துவிட்டு அமைதியாக புன்னகைக்கின்றது இந்தியா…!

மிகபெரிய ராஜதந்திரம் இது.. என்ன இருந்தாலும் “பகவான் கண்ணன்” வாழ்ந்த தேசமல்லவா? கொஞ்சமாவது ராஜதந்திரம் வராதா என்ன?…!

– ஸ்டான்லி ராஜன் (Stanley Rajan)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,853FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...