திமுக., கூட்டணி நிறைவு! இனி… தேமுதிக., நிலை ஊசல்..!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம்

Vijayakanth STalin - 2026

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று விட்டதாக, திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக., கூட்டணிப் பேச்சுக்கள் நிறைவடைந்த நிலையில், தொகுதி உடன்பாடுகள் கையெழுத்தாகின. இதை முன்னிட்டு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து விட்டது. கூட்டணி இறுதி செய்யப் பட்டு விட்டது. இனி கூட்டணிக்கான கதவுகள் மூடப் பட்டு விட்டன. எனவே தேமுதிக.,வுக்கு இனி வாய்ப்பு இல்லை… என்று கூறினார்.

இறுதி பங்கீடு  விவரம்…
திமுக 20
காங்கிரஸ் 10
இ.கம்யூ 2
மார்க்சிஸ்ட் 2
விசிக 2
மதிமுக 1
முஸ்லிம் லீக் 1
கொங்கு மக்கள் 1
ஐஜேகே 1

ஆக…. ஆக… மொத்தம் 40 தொகுதிகள்!

இந்நிலையில், தேமுதிக.,முன் உள்ள ஒரே வாய்ப்பு, அதிமுக., கூட்டணிதான்! இல்லாவிட்டால், அமமுக., கமல்ஹாசன் என்று வழிதவறும் வாய்ப்புகளே உள்ளன. அதுவும் இல்லாவிட்டால், தனித்து நின்று ஓட்டுகளைப் பிரிப்பது ஒன்றே வழியாக உள்ளது. இந்த மூன்று வாய்ப்புகளிலும்  தேமுதிக., ஒரு சீட் கூட பெறாது என்பதால், அதிமுக., சொல்வதை கேட்டாக வேண்டிய நிலைக்கு தேமுதிக.,வை தள்ளிவிட்டது திமுக.,!

இது நாள் வரை, திமுக., கூட்டணி கூட நிறைவு பெற விடாமல் தள்ளிப் போனதற்கு தேமுதிக.,வே காரணம் என்று கூறப் பட்டது. இப்போது அதே நெருக்கடியை திமுக., தரப்பு தேமுதிகவுக்கு கொடுத்திருக்கிறது.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.