December 6, 2025, 7:35 AM
23.8 C
Chennai

சபாஷ்… வாங்க ரஜினி.. ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்.! அழைக்கிறார் கமல்!

kamal rajini 1 - 2025

சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள். .. என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

காரணம் என்ன? தில்லியில் ஏற்பட்ட கலவரத்தைக் குறித்து கருத்து தெரிவித்த ரஜினி காந்த், மத்திய அரசின் உளவுத் துறை தோல்வி என்று குற்றம் சுமத்தினார். மேலும், உள்துறை அமைச்சகம் இதற்கு பொறுப்பு என்று கூறினார். எனவே அவர் மத்திய அரசை குற்றம் சொல்வதாக நினைத்துக் கொண்டு, கமல்ஹாசன் அவரது கருத்தை வரவேற்று தாமும் ரஜினியும் ஒரே பாதையில் செல்வதாகவும் இருவரும் கைகோத்து செயல்படலாம் வாங்க என்று அழைத்ததாகவும் கூறி கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்… சமூகத் தளங்களில்!

JOY @Joysusai1 ஆண்டவரே, நீங்க நினைக்கிற மாதிரி சூப்பர் ஸ்டார் உங்க தப்பான வழிக்கு ஒருபோதும் வரமாட்டார். என்னைக்கும் சூப்பர் ஸ்டார் வழி தனி வழி.. அது ஆன்மீக வழி.. அஹிம்சா வழி…

ரஜினியின் கருத்துக்கு கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உளவுத்துறை தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் “எஸ்.ஆர்.சேகர்” தெரிவித்துள்ளார்.

ரஜினி மற்றவர்களைப் பார்த்து “மலிவான அரசியலை” செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் தலைதூக்கியுள்ள வன்முறையை, மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியிருக்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களால், எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

ஹைதராபாத்தில் “அண்ணாத்த” படபிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், இரவு 7 மணியளவில், சென்னை திரும்பினார்..

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த, நடிகர் ரஜினிகாந்த், டெல்லி வன்முறை, உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாகவும், அதற்கு, தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார். வன்முறைச் சம்பவங்களை, மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.

சிலர் தன்னை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த ரஜினிகாந்த், அக்கட்சிக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

போராட்டம் நடத்த உரிமை இருந்தாலும், அதில் வன்முறை கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றார். டெல்லியில், வன்முறையை ஒடுக்காவிட்டால், சம்பந்தப்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என, ரஜினிகாந்த் தெரிவித்தார்.

https://twitter.com/MohanVSS/status/1232723595572301824

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories