நிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி! சமந்தா!

சினி நியூஸ் சினிமா
samantha 3 - 2026

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கல்லூரி காலத்து காதலை மிக அழகாக படமாக்கி இருந்தார்
பிரேம் குமார். இதில், நடிகை த்ரிஷா ஜானு என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.இந்தப் படம் ஜானு என்ற பெயரில், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் படத்தில், நடிகை த்ரிஷாவின் கேரக்டரில் நடிகை சமந்தா நடித்தார்.இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்ற வருத்தம் நடிகை சமந்தாவுக்கும் இருக்கிறது.

இது குறித்து, அவர் டுவிட்டர் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியிருப்பதாவது: பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்தெல்லாம் பேசாமல், இந்தப் படத்தை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான். படம் என்னை ரொம்பவே மாற்றி இருப்பதாக உணர்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்காக ஜானு படத்துக்கு நான் கட்டாயம் நன்றி சொல்வேன். ரசிகர்களாகிய உங்களுடைய கனிவான வார்த்தைகள் எனக்கு எப்போதும் ஆறுதலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.