உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்

Published:


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

PTI06 30 2022 000143B - 2026

கன்னையா லாலின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் அசோக் கெலாட் பேசினார். அசோக் கெலாட், கட்சித் தலைவர் கோவிந்த் சிங், வருவாய்த் துறை அமைச்சர் ராம்லால் ஜத் உள்ளிட்டோருடன் கன்னையா லாலின் வீட்டிக்குச் சென்றார். 

தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உரிய நேரத்துக்குள் விசாரணை நடத்திமுடிக்கவும் படுகொலை சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அசோக் கெலாட் கூறினார்.

கன்னையா வீட்டுக்கு முதல்வர் வருகை தருவதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

PTI06 30 2022 000144B 1 - 2026

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

PTI06 30 2022 000145B - 2026

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அவா்கள் வெளியிட்ட மற்றொரு காணொலியில், கன்னையா லாலின் தலையை துண்டித்துவிட்டதாகக் கூறினா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து கொலையாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் காவல் துறை சாா்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.

இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, அந்தக் கொலையின் பின்னணியில் ஏதேனும் அமைப்பு அல்லது சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்று விசாரணை நடத்த என்ஐஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் காவல் துறை டிஜிபி எம்.எல். லதோ் புதன்கிழமை கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலை தொடா்பாக ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது உள்பட இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் கெளஸ் முகமதுக்கு பாகிஸ்தானில் உள்ள தாவத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அவா் கராச்சி சென்றுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகியோரிடம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.


கன்னையா லாலின் உடலில் 26 வெட்டுகாயங்கள்..


நுபுர் சர்மாவை ஆதரித்ததால் படுகொலை செய்யப்பட்ட கன்னையா லாலின் உடலில் 26 வெட்டுகாயங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அதில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, அந்தக் கொலையின் பின்னணியில் ஏதேனும் அமைப்பு அல்லது சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்று விசாரணை நடத்த என்ஐஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை  கன்னையா லாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவரின் கழுத்து, தலை, கை, முதுகு மற்றும் மார்பில் 26 வெட்டுகாயங்கள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img