கீதை அத்யாயம் 18 சபரிமலை படி 18 தி.க., குழுவுக்கு அடிகொடுக்க ஏப்ரல் 18

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

veeramaniraju - 2026

இந்துக்களின் தெய்வமாகப் போற்றப் படும் கிருஷ்ணன் குறித்து அவதூறாகக் கருத்தைச் சொன்னாலும் சொன்னார்… திராவிடர் கழக தலைவர் வீரமணி பல்வேறு தளங்களில் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அனைவருமே தங்கள் கருத்துகளால் மட்டுமே அவரைத் தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது!

ஐயப்ப பக்தர்களின் குருசாமியாகத் திகழும் ஆன்மிகக் காவலர் வீரமணி ராஜு, புதிதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். செல்போனில் எடுக்கப் பட்டு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்கள் மூலம் பகிரப் பட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், பகவான் கிருஷ்ணர் குறித்து வீரமணி கூறியுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கீதை அத்யாயம் 18 சபரிமலை படி 18 வீரமணி குழுவுக்கு அடிகொடுக்க ஏப்ரல் 18 என்று வேறு முழங்குகிறார்.

இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான போர்… இதில் அதர்மம் வீழ அன்று குருக்ஷேத்திர யுத்தத்தில் கண்ணன் நின்றது போல், இந்தப் போரில் நரேந்திர மோடி முன் நிற்கிறார் என்று கூறுகிறார் வீரமணி ராஜு.

அவரது வேண்டுகோள் (வீடியோ…)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.