துக்ளக் இதழ் மீது திக புகார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

dk compliant - 2026

துக்ளக் வார இதழ் மீது தி.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கனும் திராடர் கழக தலைவர் கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும் தான் காரணம் என்ற வகையில் துக்ளக் வார இதழில் கட்டுரை வெளியானதாகவும், இதற்காக அதன் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும் திக.வினர் கூறியுள்ளனர்.

துக்ளக் வார இதழில் திராவிடர் கழகத்தை பற்றி அவதூறான வகையில் கட்டுரை வெளியானதாகக் கூறி, அதனைக் கண்டித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கட்டுரையாளர் சத்யா, பதிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் புகார் மனு அளித்துள்ளார்.

முன்னதாக, பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிட்டு பகவான் கிருஷ்ணரை தொடர்பு படுத்தி தி.க. தலைவன் வீரமணி பேசியிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

2 thoughts on “துக்ளக் இதழ் மீது திக புகார்!”

  1. திக வினர் இந்துக்களை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை (இந்துக்கள் மட்டும்; ஏனென்றால் மற்ற மதத்தினர் மீது பயம்) எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். அதுவும் பிராமணர்களை மிகவும் மோசமாக நடத்தலாம் (அவர்கள் குடுமியை, பூணூலை அறுப்பது போன்றவை). பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான் காரணம் என்றார் திரு வீரமணி. நாக்கில் நரம்பில்லாமல் இதிகாச புராணம் தெரியாமல் உளறினார். நாவடக்கம் இல்லை. அவரை மற்ற திக உறுப்பினர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் அவர்களை பற்றி இப்போது துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நன்றாக irukkirathu.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

  2. துக்ளக் பத்திரிகையில் கட்டுரை வந்த உடனே, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவா? நல்ல sorikkatchi,.வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பது தமிழ் முதுமொழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.