அடுத்து வருது ஒரு புயல்! தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

Regional Meteorological Center 1 - 2026அடுத்து ஒருபுயல் இன்னும் 3 நாட்களில் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் 25-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 29ஆம் தேதி புயலாக மாறுகிறது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் தொடர்பாக, தொடர் நாட்களில் நகர்வை ஆய்வு செய்யும் போது, அதன் வீரியம் தெரியவரும். இதன் மூலம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது! சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.