இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்

iman annachi - 2026

சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் இமான்.

இமான் அண்ணாச்சி என்று டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பிரபலம் ஆனவர். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், இவரது வீட்டில் உள்ள பீரோவில் 41.5 சவரன் மதிப்பிலான நகைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று அரும்பாக்கம் போலீசில் இமான் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு பரத் மற்றும் ஜெனீலியா ஆகியோர் நடிப்பில் வந்த சென்னைக் காதல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இமான் அண்ணாச்சி. தொடர்ந்து தலைநகரம், மரியாதை, கோ, வேட்டைக்காரன், மரியான், நையாண்டி, ஜில்லா, கோலி சோடா, கயல், பூஜை, மெட்ராஸ், காக்கி சட்டை, புலி, கதகளி, அஞ்சல, சிங்கம் 3, சாமி 2, நிமிர், டிராபிக் ராமசாமி என்று பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டீஸ் சுட்டீஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.