கோ… மெரினா பீச்சுக்கு! மதி… கருணா பேச்சுக்கு! இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால்..?!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

stalin karunanidhi - 2026

தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக., தலைவர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் கொடுத்ததும், பதக்கம் வென்ற சித்ரா உள்ளிட்ட மற்ற இருவரை வசதியாக மறந்ததும் இப்போது ஹாட் டாபிக்காக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது.

திமுக., தலைவர் ஸ்டாலின் ஏன் கோமதிக்கு மட்டும் பணம் கொடுத்தார்; ஏன் கோமதியை மட்டும் அழைத்து அரசியல் செய்கிறார் என்பதன் பின்னுள்ள நையாண்டியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அந்தக் கருத்து…

“ஒடம்பொறப்பே.. பத்துரூவா சம்பாரிக்கிறதுக்கு நாம எத்தன கஸ்டப் படறோம்.. நீ என்னடான்னா பத்து லச்சத்த தூக்கி குடுத்துருகீயே.. ”

“கதை அப்டியில்ல தலிவரே.. நானே பத்து லச்சம் தந்துருக்கேன்னா எடப்பாடி பயிஞ்சு லச்சமாவது தரனும்ல்ல.. அப்டி குடுக்கலன்னா அத வச்சே ஒருமாசம் அரஸியல் பண்ணலாமே.. அதுக்குதான்..”

“ஒடம்பொறப்பே.. இந்த புள்ளைக்கு 10 லட்சம் குடுத்த.. இன்னும் ரெண்டுபேரு தமிழ்நாட்லேந்தே தங்கம், வெள்ளி வென்றதா செய்தில வருதே.. அவுங்களுக்கெல்லாம் ஏன் நீ அதே ரூவாய தரலைன்னு எடப்பாடி கேப்பாரே..”

“அவுரு எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருக்காரு நைய்னா.. ஆனா யாரும் அவுரு பேசறதை கேக்கறதில்லை.. இது நமக்கு அட்வான்டேஜ் தானே..சரி.. பத்து லட்சம் தந்ததுக்கே இந்தளவுக்கு பாயுறீங்களே.. என் இடத்துல நீங்க இருந்தா என்ன கிளிச்சிருப்பீங்க?”

” இதை வச்சே பலகோடி சம்பாரிச்சிருப்பேன் ஒடம்பொறப்பே.. அப்படி பாடுபட்டு சம்பாரிச்சதைத்தான் இப்ப நீ காலி பண்ண பாக்குற..அதனால்தான் என் நெஞ்சம் பதைக்கிறது..”

“எப்டி சம்பாரிச்சிருப்பீங்க நைய்னா?”

“‘மத்திய மாநில அரசுகளால் வஞ்சிக்கப்பட்டு பாவப்பட்ட கோமதிக்கு காலணிகளை வழங்க தாராளமாக நிதி அளிப்பாய் உளுத்தம்பருப்பே’ ன்னு உருக்கமா நம்ம பேப்பர்ல லெட்டர் எளுதுவேன்.. அவ்வளவுதான்.. நம்ம குறுநில மன்னர்களெல்லாம் பாடுபட்டு களமாடி களமாடி தமக்கும் ‘ஒதுக்கிக்கிட்டு’ மாவட்டம் தோறும் பிரம்மாண்ட மீட்டிங் போட்டு தொகுதிக்கு 25 லேந்து 50 கோடி வரை நம்ம கையில குடுப்பாங்க.. உடனே நானும் காலணி கம்பெனிகாரன் ஒத்தன கூப்பிட்டு ஒரு கான்ராக்ட்ட குடுத்து நிதி பெறுவதோட கோமதிக்கும் ஒரு வாரம் உழைக்கும்படியான நல்லதா ஒருஜோடி_ஷூ வாங்கி அதை அளிப்பதை பிரம்மாண்ட விழாவா எடுப்பேன்.. தம்பி டைமண்டுலேந்து ரஜினி,கமல் வரை அழைத்து பேச வச்சு நாலுவாரம் நம்ம டீவிலயும் போடுவேன்.. டீவீக்கும் விளம்பர வருவாய் கிடைக்குதா?? அப்புறம்…”

“தெய்வமே.. போதும் நைனா..போதும்.. இனிமே பாத்து பக்குவமா நடந்துக்கறேன்..

– வாட்ஸ்அப்பில் வலம் வரும் கேலியான பதிவு!

1 thought on “கோ… மெரினா பீச்சுக்கு! மதி… கருணா பேச்சுக்கு! இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால்..?!”

  1. தலைப்பை ஒழுங்கா போடுங்க. என்னமோ புரட்சி பண்ற மாதிரி nadanthukkaatheenga.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.