மேற்கு வங்கத்துடன் மம்தாவின் வயிற்றையும் கலக்கிய “ஜெய் ஸ்ரீராம்”

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

jaishriram - 2026

மேற்கு வங்கத்தை கலக்கிய ஜெய்ஸ்ரீராம், மம்தா பானர்ஜியின் வயிற்றையும் கலக்கியடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏராளமானோர் போஸ்ட் காடுகளில் தபால் அட்டைகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை எழுதி மம்தா பானர்ஜியின் முகவரிக்கு கடிதங்களை தபாலாபீஸில் போஸ்ட் செய்தனர். இதை ஒரு இயக்கமாகவே பலரும் நடத்தி வருகின்றனர்

கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் தூக்கத்தை தட்டி எழுப்புவதற்காக ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்துடன் தபால் அட்டைகள் அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் முழங்கியதற்காக பாஜகவினர் சிலரை அண்மையில் மம்தா பானர்ஜி சிறையிலடைத்தார். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்!

அதே போன்று ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியதற்காக மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பல இடங்களில் மக்களை அடித்து துவைத்தனர். இது குறித்த வீடியோ பதிவுகள் அதிகம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனjei shriram campaign - 2026

இந்நிலையில் ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னாலே காவல்துறையினர் அவர்களை கைது செய்து உள்ளே இழுத்துச் சென்று விடுவார்கள் என்ற கருத்துடன் பல்வேறு ஹாஸ்யங்கள் உலா வரத் தொடங்கின

காவல் துறையினரை அழைக்க வேண்டுமா? 100 க்கு போன் செய்தால் மற்ற மாநிலங்களில் செல்லுபடியாகும். ஆனால் மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று மெசேஜ் அனுப்பினாலே போதும் காவல்துறையினர் உங்கள் வீடு தேடி வருவார்கள் என்று கேலி செய்யும் அளவுக்கு மம்தா பானர்ஜியின் நடவடிக்கை அமைந்திருந்தது!

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு புத்தி புகட்டும் வகையில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகங்களை எழுதி லட்சக்கணக்கானோர் தபால் அட்டைகளை மம்தா பானர்ஜியின் முகவரிக்கு அனுப்பி வருகின்றனர் இந்த இயக்கம் மேற்குவங்கத்தில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது… ஜெய் ஸ்ரீராம் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.