எந்த ராசியினர் அத்திவரதரை எப்படி தரிசித்தால் … விரும்பிய பலன் கிடைக்கும்!

Published:

Kanchipuram Athivarathar sevai18 - 2026

அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் கூறிய தகவல்கள் இவை…

அத்தி வரத பெருமாளை தலையிலிருந்து கால் வரை பார்த்து வணங்குதல் மிகவும் நல்லது. குறிப்பாக ஒவ்வொரு ராசியினரும் பெருமாளை முழுவதுமாக பார்ப்பதோடு, அவர்களின் ராசிக்கேற்ப எப்படி வணங்க வேண்டும் என்பதைச் சொல்கிறேன்…

மேஷம்
பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.Kanchipuram Sri Athivarathar Darshan6 - 2026

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது. ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது.

Kanchipuram Athivarathar sevai14 - 2026

மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும். ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Kanchipuram Athivarathar sevai4 - 2026கடகம்
பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும் Athevarathar - 2026சிம்மம்
பெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.Kanchipuram Sri Athivarathar Darshan1 - 2026

கன்னி
பொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது. (திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!)Kanchipuram Athivarathar sevai21 - 2026

துலாம்
துலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர். அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

Kanchipuram Sri Athivarathar Darshan4 - 2026விருச்சிகம்
பெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.  சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Kanchipuram Athivarathar sevai12 - 2026தனுசு
தனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது.

Kanchipuram Athivarathar sevai4 - 2026மகரம்
பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.

Kanchipuram Athivarathar sevai1 - 2026
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீஅத்திவரதர் தரிசனம்

கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும்.

Kanchipuram Athivarathar sevai10 - 2026மீனம்
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும்.

Kanchipuram Athivarathar sevai5 - 2026அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

  • புகைப்படங்கள்: வி.என். கேசவபாஷ்யம்

Related articles

Recent articles

spot_img