தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தத நிலையில் மொத்தசராசரி வாக்குப்பதிவு 60.70% சதம் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நேற்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6மணியோடு நிறைவடைந்தது.
மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பு ஒரே கட்டமாக நடைபெற்றது.ஊராட்சிகளுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்தது.
வாக்கு பதிவானது நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பாதித்தவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களித்தனர்.கொரோனா இல்லாதவர்கள் மாலை 5மணிக்குமேல் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்திற்கு வந்தாலும் இவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.சான்றுடன் வந்த கொரோனா பாதித்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 6மணிக்கு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு
சீல் வைக்கும் பணிகள் முகவர்கள் முன்னிலையில் நடத்தி
பலத்த பாதுக்காப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
60.70% வாக்குப்பதிவு:
நேற்று நடந்த பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70% வாக்குப்பதிவு நடந்ததாகவும் இதில்
பேரூராட்சி – 74.68% ; நகராட்சி – 68.22% ; மாநகராட்சி – 52.22% வாக்குப்பதிவானது.
அதிகபட்சமாக தர்மபுரியில் 80.49 சதவிகிதம், மாநகராட்சிகளில் கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகியுள்ளன.நகராட்சிகளில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 75.57% வாக்குகள் பதிவு.
குறைவாக சென்னையில் 43.59% வாக்குப்பதிவானதாக
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தினர் தகவல் தெரிவித்தனர்.
எங்கும் ஓட்டுக்கு பணமமயம்:
பொதுவாக மக்களவை சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பணம் தருவார்கள்.உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரமுகர்கள் சொந்த பந்த வேட்பாளர் பார்த்து வாக்களிப்பார்கள்.இதெல்லாம் இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணமே என்ற தாரகமந்திரம் வாக்குப்பதிவு நடந்த இடங்கள் அனைத்தும் நிலவியது.




