தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜன.1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நிதி துறை வெளியிட்ட அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.