கொளுத்தும் வெய்யில்.. அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டி அலங்காரம்! விநோத வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

karur mariamman temple - 2026கொளுத்தும் வெயிலுக்கு அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியினால் அலங்காரம் செய்து அழகு பார்த்தனர் கரூர் அருகே ஒரு கிராம மக்கள்!

கரூர் அருகே குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 2000 கிலோ ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப் பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் தமிழக அளவில் வெயில் கொளுத்து, கொளுத்து என்று கொளுத்துகின்றது,. இன்னும் வெயிலின் தாக்கம் 3 நாட்களுக்கு தொடரும் என்றும் சென்னை வானிலை மையமும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியினால் அலங்காரம் செய்து அழகு பார்த்த கிராம மக்களின் பக்தி கரூர் அருகே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.mariamman temple - 2026

கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பாலசமூத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. வருடா வருடம் பக்தர்கள் பங்களிப்புடன் அம்மனை குளிர்வித்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தில் ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

கருவறை முழுவதும் ஐஸ் கட்டியால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அம்மன். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து எண்ணெய் விளக்கேற்றியும், கம்பத்திற்க்கு உப்பு போட்டு தரிசனம் செய்தனர்.ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிகளவு வருகை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.