தென்காசியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

krishnasamydr - 2026

தென்காசி நாடாளுமன்ற தொகுதி 3வது சுற்று நிலவரத்தின்படி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே.23) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான
இடைத்தேர்தலும் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது.

இவை அனைத்துக்கும் இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங் கியது. தமிழகத்தில், 45 மையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டுவருகின்றன.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட தென்காசி தனி தொகுதியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டும், அவர் திமுக வேட்பாளர் தனுஷ் குமாரை விட 15440 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

3வது சுற்று முடிவில் கட்சிகள் பெற்ற வாக்கு நிலவரம்.

திமுக 52671
அதிமுக 37231
அ ம மு க 9553
நாம் தமிழர் 5823
மக்கள் நீதி மையம் 2923

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.