குன்னூர் சிம்ஸ் பூ!ங்காவில் இன்று முதல் பழக் கண்காட்சி

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

fruit show - 2026குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் பழக் கண்காட்சி தொடங்குகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவையொட்டி 2 நாட்கள் நடைபெறும் 61வது பழக்கண்காட்சி இன்று தொடங்குகிறது.

சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயிலில் 12அடி உயரத்தில் பலாப்பழம் உட்பட பல்வேறு பழங்களால் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது காண்போர் அனைவரையும் இனிப்புடன் வரவேற்பது போல் அமைந்துள்ளது.connoor fruit show - 2026

மேலும் இந்த வருடம் சிறப்பம்சமாக ஆரஞ்சு, சாத்துக்குடி, பைனாப்பில், பிளம்ஸ் டார்ஜன் போன்ற பல்வேறு பழங்களை கொண்டு பழ கோபுரம், மயில் மற்றும் பட்டாம் பூச்சி ஆகியவை இடம் பெறுகிறது.

இதுமட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பாக 10 க்கும் மேற்பட்ட அரங்குகள் மறும் தனியார் அரங்குகளில் முள் சீதா பழம், துரியன் பழம், வெல்வெட் ஆப்பிள், முட்டை பழம், பம்ளிமாஸ் பழம், ரோஸ் ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.