காம்பிரும் அப்ரிதியும் வார்த்தைப் போரில்..!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

afridi ghambir - 2026

படிச்சவங்க இப்படி பேசுவாங்களா? என்று காம்பீரை மீண்டும் சீண்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் அப்ரிதி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். இவர், இப்போது பாஜக சார்பில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அண்மையில் கௌதம் காம்பிர் அளித்த பேட்டி ஒன்றில், ‘புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை இந்திய அணி தவிர்க்க வேண்டும். இறுதிப் போட்டியாக இருந் தாலும் கூட இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காம்பீரின் இந்தப் பேட்டி குறித்து பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அப்ரிதி, ’’காம்பீர், இதுபோன்று பேசும்போது தனது புத்தியை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா? படித்தவர்கள் இப்படி பேசுவார்களா?’’ என்று கேட்டுள்ளார்.

இவ்வாறு இவர் ஒன்று சொல்ல, அதற்கு அவர் ஒன்று பதிலளிக்க, இருவரிடையேயும் இப்போது வார்த்தைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.