தேர்தல் முடிந்தது; நடத்தை விதிகளும் தளர்ந்தது!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

election commission - 2026

தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப் பட்டுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப் பட்டது. இதற்காக, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தியது தேர்தல் ஆணையம். இதன் மூலம், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுப்பது, பணம் கொண்டு செல்வதை தடுப்பதை, குறிப்பிட்ட அளவு பணத்துக்கு மேல் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதை நடமுறைப் படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

இந்நிலையில் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப் பட்டது. இதன் பின்னர் புதிய அரசு அமைக்கப் படும் சூழல் உருவானதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டன. 4 மாநில பேரவை தேர்தல், இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இனி கெடுபிடிகள் இன்றி வணிகத்தில் ஈடுபடலாம் என வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.