
மரணம் இயற்கையானலும், செயற்கையானலும் இறந்த பின் அந்த உடலுக்கு உயிரிழந்தவர்களுக்கு உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவரவர் கலாச்சாரம் சார்ந்த பல வகையான சடங்குகள் செய்யப்படும்.
அந்த வகையில் பிரேசில், மற்றும் வெனிசுலா பகுதிகளில் வாழ்ந்து வரும் யானோமமி எனும் பழங்குடியினர்கள் கடைபிடிக்கும் சடங்கு நம்மை பதறிட வைக்கும் நிலையில் உள்ளது.
அதில் யானோமமி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் இருக்கும் வினோதமான சடங்கு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
பிரேசில் மற்றும் வெனிசுலா பகுதிகளில் வாழ்ந்து வரும் யானோமமி எனும் பழங்குடி மக்கள். யாரேனும் இறந்து விட்டால், உடலை எரித்து அந்த சாம்பலுடன் எலும்பு மற்றும் காய்கறி சேர்த்து சூப் வைத்து குடிக்கின்றனர்.
இது மட்டுமின்றி, யானோமமி மக்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருவதாக கூறுகின்றனர்.
தங்கள் இனத்தில் மரணம் என்ற ஒன்று நடக்ககூடாது. அப்படி நடந்தாலும் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். இதனால் தான் இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்புகளை சூப் வைத்து குடிப்பதாக கூறுகின்றனர்.
இதனால், அவர்கள் தங்களுடனே வாழ்கின்றனர் என யானோமமி மக்கள் நம்புகின்றனர்.



