பரங்கிமலை ரயில் நிலைய நிகழ்வு மிகவும் துயரகரமான சம்பவம். அதற்கான காரணங்களை அலசினால் பின்வரும் உண்மைகள் வெளிவரும்.
# முதலில் வண்டி ஓட்டுநரை தண்டிக்கவேண்டுமாம்.அவரெல்லாம் படித்தவர்தானா
.மெதுவாக ஓட்ட வேண்டியதுதானே போன்ற அறிவிற்கு பொருந்தாத வினாக்கள்
விபத்தில் இறந்த மாணவனின் நண்பனிடம் மைக்கை நீட்டி காட்சி ஊடகங்கள், கருத்துகளை கேட்டால் இப்படித்தான் வரும்.
# விபத்திற்கான காரணமான சுவர் நல்ல இடைவெளியில் அமையப்பெற்றுள்ளது.விபத்திற்கு வித்திட்டதுஅதுவல்ல. படிக்கட்டுப்பயணமே.
# அதுவும் அந்த மலையேறிகள் பயன்படுத்தும் முதுகு பையே படியில் தொத்திக்கொண்டு வருபவரின் பின்னே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் சுவற்றுடனான சிறு உரசலே அவர்களையும் அவர்களுடன் தொங்கிக்கொண்டுவருபவர்களையும் சேர்த்து நிலைகுலைய வைத்துள்ளது.
# இம்மாதிரியான துயரச்சம்பவங்களில் பாதிப்படையவர்கள் பெரும்பாலும்(புள்ளிவிபரங்களின்படி95%) மாணவர்களும், அவர்தம் வயதொத்த இளைஞர்களே. உள்ளே இடமே இருந்தாலும் படுக்கட்டு பயணம் அவர்களுக்கு ஒரு போதையை கொடுக்கிறது.
# தொடர்வண்டி ப்பாதையில் சிக்னல், மின்கம்பி அறுந்து விழுதல் போன்ற கோளாறுகள் தவிர்க்க இயலாததே.அதனால்
ஏற்படும் நெரிசலான பயணத்திற்கு மாற்றாக தாமதப்பயணம், பேருந்து போன்ற மாற்றுவழிகளை முயலலாம்.
# மேலும் நெரிசல் நேரங்களில் கூடுதல் மற்றும் சிறப்பு சேவைகளை முன்னிறுத்தலாம்
# மேலும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு சலுகை கட்டணப்படிவம் வழங்கும்போது இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒரு இயக்கம் கல்லூரி யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் நடத்தலாம்.
# ரயில்பெட்டிகளில் மாறும் சூழலுக்கேற்ப மூடும் கதவு வசதியை மெட்ரோ வில் பயன்படுத்துவது போல் ஏற்படுத்தலாம்.
# சில நேரங்களில் தொழிலாளர் கள் (Driver/Guard) குறித்த நேரங்களில் பணிக்கு வராமையும் அதனால் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதால் இரண்டு வண்டிகளுக்கான பயணிகள் ஒரே வண்டியில் பயணிக்க நேரிடுகிறது.
# இதில் வேதனை என்னவெனில் இறந்தவனுக்கு தாய்தந்தையர் படும் துயரம் தெரிவதில்லை.ஆனால் படுகாயம்,மற்றும் ஊனம் தரும் வலி ,பெற்றோருக்குமட்டுமல்ல, உயிருடன் இருப்பவருக்கும் வாழ்நாள் வரை நீடிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
,தமிழக அரசும் ஒரு லட்சம் என நிவாரணம் அளிக்கள் முன்வந்தது ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தாலும் அது ஏற்புடையதே.
# நிவாரணப்பணி முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது பாராட்டப்படவேண்டிய ஒன்று.ரயில்வே உயர்அலுவலர்கள்,ரயில்வே உயர்காவல் அதிகாரிகள்,சுகாதார செயலர்,ஆகியோர்களின் ஆய்வு மற்றும் ஆறுதல் குறிப்பாக காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா அவர்களின் வருகை போற்றுதலுக்குரியது.
– பரங்கிமலையிலிருந்து ரமணி




