சென்னை பாணியில் கரூரிலும் கத்தி வாள் என அச்சுறுத்தும் ரவுடிகள்!

சற்றுமுன் சென்னை தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

rowdy manikandan karur - 2026

சென்னையை தொடர்ந்து கரூரிலும் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பயங்கர ஆயுதங்களை சர்வசாதாரணமாகக் கையாள்கின்றனர். இவற்றை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். பிறந்த நாள் விழாவை நடுரோட்டில் பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணிகண்டன் என்பவருக்கு பிறந்த நாள். அதனைக் கொண்டாடிய மற்ற ரவுடிகளும், மணிகண்டனுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அளவில் ரவுடிகள் அட்டகாசம் சில இடங்களில் தொடர்ந்து வந்த நிலையில் ஆங்காங்கே காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர், ரவுடிகள் தங்கள் பிறந்த நாளையொட்டி கேக்கை பட்டாகத்தி மற்றும் வீச்சரிவாளால் வெட்டுவது பேஷனாகி வருகின்றது.

IMG 20190528 WA0004 - 2026
இந்நிலையில் கரூர் அடுத்த பசுபதிபாளையம் காவல்நிலைய சரகம், தொழிற்பேட்டையில் ரவுடியின் பிறந்த நாளையொட்டி நள்ளிரவு மெயின்ரோட்டின் அருகே வீச்சரிவாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.