ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி! நாயுடுவுடன் குலவினார்; ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

02 May29 Jayakumar - 2026

சென்னை; திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் ராகுல் பற்றிப் பேசினார். சந்திரபாபு நாயுடுவுடன் கூடிக் குலவினார். இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், புதிய மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், ” மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பது குறித்தெல்லாம் கட்சி தான் முடிவு செய்யும்,” என்று கூறினார்.

மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ஜெயக்குமார், ”ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி. சந்திரபாபு நாயுடுவுடன் நட்பில் இருந்துவிட்டு, இன்று ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்பில் பங்கேற்கிறார்,” என்று விமர்சித்தார்.

இதனிடையே, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

*அதிமுக சார்பில் யார் அமைச்சராவார் என கேள்வி எழும்பிய நிலையில் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. #OPRavindranathKumar | #PMNarendraModi

1 thought on “ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி! நாயுடுவுடன் குலவினார்; ரெட்டியின் பதவியேற்பில் பங்கேற்றார்!”

  1. அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர், துணை முதல்வர் திரு ஓபிஎஸ் குமாரர், திரு ரவீந்திரநாத் அவர்களுக்கு மாநில அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிட்டப் போவது உறுதி. எந்தத் துறையாக இருந்தாலும் அது அவருக்கும் அதிமுகவிற்கும் கசக்கப் போவதில்லை. மத்திய அமைச்சரவையில் இடம்கிடைத்துவிடுமே? திமுகவால் முடியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.