குடிநீர் விநியோகம் செய்யாத ஊழியரை கண்டித்து பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சி!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

water problem kerosene - 2026

சேலம் அருகே திம்மம்பட்டி பகுதில் சில குடும்பத்திற்கு மட்டும் குடிநீர் வினியோம் செய்யாத ஊழியரை கண்டித்து பொது மக்கள் தீக் குளிக்க முயற்சி செய்தனர்

சேலம் மாவட்டம் திம்மம்பட்டி கிராமத்தில் மேடான பகுதில் வசிக்கும் சில குடும்பத்திற்கு கடந்த 30 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்ச்சாட்டு எழுந்துள்ளது.

தண்ணீர் வினியோம் செய்யும் ஊழியரை பல முறை அனுகி முறையிட்டும் குடிநீர் வினியோம் செய்யாமல் மெத்தனம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மின் மோட்டார் வைத்து தண்ணீர் உருஞ்சப்படுவதாக குற்றம்சாட்டி ஏழு குடியிறுப்புகளின் இணைப்பும் துண்டித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதால் , ஊழியரை கண்டித்து பாதிக்கப்பட குடும்பத்தை சேர்ந்த சிலர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக , உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக் குளிக்க முயன்றனர்.

அதனை கவனித்த காவலர்கள், பொது மக்களின் போராட்டத்தை தடுத்து கைது செய்து செய்தனர். மீண்டும் தங்களுக்கு இணைப்பு வழங்கி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.