நம் ஊரில் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் நாடகம் நடப்பதை பார்த்து இருக்கிறோம்; ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் விசித்திரமாக ஜெகன் பதவிப் பிரமாணம் செய்த பின்தான் செருப்பு அணிந்து கொள்வேன் என்று சூளுரைத்து நடத்திக்காட்டியுள்ளார் அணில் குமார் என்ற தீவிர விசுவாசி.
தனக்குப் பிடித்த தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக அரியணை ஏறும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் செய்த ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் தன் கனவு நிறைவேறியவுடன் மகிழ்ச்சியோடு செருப்பு அணிந்து காணப்படுகிறார்.
ஜெகன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுகணம் காலுக்கு செருப்பு அணிந்து கொள்ள வேண்டும் என்று அனில்குமார் நிச்சயித்துக் கொண்டார். 10 ஆண்டுகளாக ஜனநேதா ஜகன் முதலமைச்சராக வேண்டும் என்று இரவு பகல் பாராது உழைத்தார் அணில்குமார்.
இந்த 10 ஆண்டுகளும் காலுக்கு செருப்பு அணியாமலேயே இருந்து வந்தார் வெயில் மழை பாராமல் வெறும் காலோடு உழைத்த அனில்குமார் தெலங்கானா ஆந்திரா பிரிவினையில் முக்கிய பங்கு வகித்தார் .
ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் முக்கியமானவராக இருந்தார் அவர் மீது கடுமையான விசுவாசம் கொண்டவர். 2009இல் ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் பின் ஜெகனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அயராது பாடுபட்டார்.
காங்கிரஸ் ஜகனை சிறையில் தள்ளியது. அச்சமயத்தில் அனில்குமார் பஸாரா சரஸ்வதிதேவி கோவிலுக்குச் சென்று ஜெகனை முதல்வராக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்! அதோடுகூட ஜெகன் முதல்வர் பதவியில் அமரும் வரை காலுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமிட்டார்
உறவும் நட்பும் அவரை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா என்று ஏளனம் செய்தார்கள்! யாரையும் லட்சியம் செய்யாமல் அனில் குமார் தன் சபதத்தை நிறைவேற்றினார்!
ஜெகன் தேர்தலில் வென்றதும் மீண்டும் பாசரா சென்று வேண்டுதலை நிறைவேற்றினார். ஜெகன் பதவி பிரமாணம் செய்து கொண்ட பண்டிகையை கண்ணாரக் கண்ட பின் தான் செருப்பணிந்தார்.




