வெயில் அதிகமாக இருப்பதால்… பலரும் ஹெல்மெட் அணிவதில்லை: தமிழக அரசு பதில்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

12 Aug 05 High court - 2026

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் பதிலளித்த தமிழக அரசு, வெய்யில் அதிகமாக இருப்பதால் பலரும் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறியுள்ளது.

பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளது குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், பைக் ரேஸை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

உயர் நீதிமன்றத்தில் பைக்ரேஸ், ஹெல்மெட் குறித்த வழக்கின் விசாரணையின் போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுக்க நடவடிக்கை என்ன என்று கேட்டது உயர் நீதிமன்றம்.

மேலும், நாளை மறுநாள் போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நாளை மறுநாள் நேரில் ஆஜராக விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை என்று பதில் அளித்தது தமிழக அரசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.