தண்டவாளத்தில் ஹாயாக அன்னநடை போட்ட… அன்னப் பறவைகள்!

அடடே... அப்படியா? உலகம் லைஃப் ஸ்டைல்

 

swans crossing railway - 2026

இங்கிலாந்தில் தண்டவாளத்தின் நடுவே அன்னப்பறவை குடும்பம் ஒன்று, அன்னநடை போட்டுச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நார்த்ஃபோல்க் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பெற்றோர் அன்னப்பறவைகளும், அதனின் குஞ்சு ஒன்றும் தண்டவாளத்தின் நடுவே ஆடி அசைந்தபடி அன்னநடை போட்டுச் சென்றன.

இதனைக் கண்ட ரயில் ஓட்டுநரும், அன்னங்களைப் பின்தொடர்ந்து மிகவும் மெதுவாக ரயிலை இயக்கினார்.

லெவல் கிராஸிங் ஒன்றும் குறுக்கிட்ட நிலையில் அன்னப்பறவைகளுக்காக ரயில் மெதுவாக இயக்கப்பட்டதால் சாலைப் போக்குவரத்தும் பாதிப்புக்கு உள்ளானது.

சுமார் அரை மணி நேரம் தண்டவாளத்தின் நடுவே அன்னங்கள் அதன் பின்னரே வேறிடம் நோக்கிச் சென்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.