பழங்கள் பல இருந்தும் சீண்டாமல்… ஹோம பிரசாதம் மட்டும் உண்ட ‘அதிசய’ குரங்கு!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்

monkey - 2026

சிக்மகளூர் அருகே கலசபுரா என்னும் இடத்தில், ஒரு வீட்டில் பவமான ஹோமம் நடைபெற்றுள்ளது. ஹோமத்தின் முடிவில் அங்கே வந்தது ஒரு குரங்கு! அந்தப் பகுதியில் தட்டுகளில் பழங்கள் நிறைய வைக்கப் பட்டிருந்த போதும், குரங்குகளுக்கு மிகவும் பிடித்த பழங்கள் எதையும் அது தொடவில்லை.

ஹோம பிரசாதமாக வைக்கப் பட்டிருந்த பிரசாதத்தை மட்டும் எடுத்து உண்ட குரங்கு, பின்னர் ஹோம குண்டத்தின் அருகில் சென்று நமஸ்காரம் செய்தது. தொடர்ந்து எவருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றது.

அதுவரையிலும் அந்தக் குரங்குக்கும் எவரும் தொந்தரவு தரவில்லை, விரட்டவுமில்லை. அதே போல் அந்தக் குரங்கும் எவருக்கும் தொந்தரவு தரவுமில்லை. எவர் மீதும் பாயவுமில்லை. வெகு இயல்பாக நிகழ்ந்த இதனை தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஒருவர்.

நாம் செய்யும் பூஜைகளும் கலாசார நிகழ்வுகளும் பக்தி பூர்வமாகவும் இதய பூர்வமாகவும் இருந்தால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை சாத்தியமாகும் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.