ஜாலியா இருக்கலாம்னு வந்தா…. காலியா இருக்குது அருவி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்

courtallam jun16 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிகக் குறைவாகவே விழுகிறது. கடந்த நான்கு தினங்களாக மழை பெய்யாததால், அருவிகளில் நீர் வரத்து வெகுவாகக் குறைந்து காணப் படுகிறது.

சீசன் மழை கடந்த 8ம் தேதி தொடங்கி இரு தினங்கள் நன்றாக இருந்தது. தொடர்ந்து அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. ஆனால் இந்த நிலை அடுத்த 3 நாட்களில் மாறி விட்டது.

இந்நிலையில் இன்னும் சீஸன் முறையாகத் தொடங்கவில்லை என்று கூறப் படுகிறது. சீஸன் தொடங்கவிட்டதாக எண்ணி குற்றாலம் அருவிகளில் குளிக்கலாம் என்று வந்த சுற்றுலா பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். இன்றும் குற்றாலம் மெயினருவியில் நீண்ட வரிசையில் நின்று, சற்று நேரமே அருவியில் தலை கொடுக்கும் நிலை தொடர்கிறது!

சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில்  குளிக்க வந்தவர்கள், ஜாலியா இருக்கலாம்னு வந்தோம், காலியா இருக்கே அருவி என்று ஏமாற்றத்துடன் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.