குஷ்பு கன்னத்த தடவினாருன்னு ட்ரெண்டு பண்ணி விட்டுருவானுங்க… எச்சரிக்கை!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

khushbu evks thirunavukarasar - 2026

தமிழகத்தில் அரசியல் என்பது அரசியல் களத்தில் நேரடியாக தேர்தலின் போது மட்டுமேயான வகையில் மேற்கொள்ளப் படுவதில்லை. அது ஒவ்வொரு கட்டத்திலும் வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் மேற்கொள்ளப் பட்டும் நாலாந்தர அரசியல்.

திமுக., ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீதான வெறுப்புணர்வைத் தூண்டியே அரசியல் செய்தது. ஒட்டு மொத்த மக்களையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்பு கொள்ள வைக்கும் வகையில் மூளையை மழுங்கடித்து அரசியல் செய்தது. அது பின்னாளில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு அரசியல் ஆனது.

தொடர்ந்து மத்தியில் பாஜக., மீதும் பிரதமர் மோடி மீதுமான வெறுப்பு அரசியலை உமிழ்ந்து வந்தது. இப்படி ஏதோ ஒரு தரப்பினரை மட்டும் கட்டம் கட்டி, அவர்கள் மீது ஒட்டு மொத்த மக்களையும் வெறுப்பு கொள்ள வைக்கும் வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து கோடிக் கோடியாய் கொள்ளை அடித்து சொத்து சேர்த்து விட்ட திமுக., தரப்பு தற்போது ஆளுநர் மீதும் தனது வெறுப்பு அரசியலை மேற்கொண்டு வருகிறது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

அதன் வெளிப்பாடுதான் அண்மைக் காலத்திய திமுக., சார்பு ஊடகங்களின் தாக்குதல்கள். இதனை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் கருத்துகள் இன்று பகிரப் பட்டு வருகின்றன.

அவற்றில் ஒரு கருத்து…

ஆளுனரே.. நாசுக்கா பேசி வெளிய அனுப்பிடுங்க..

உங்கள் அறையில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் சரியா வேலை செய்கின்றதா என்று ஒருமுறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்புறம் கவர்னர், குஷ்புவோட கன்னத்தை தடுவிட்டாரு.. கைய புடிச்சி இழுத்தாரு ன்னு ட்ரெண்ட் பண்ணிடுவானுங்க..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.